புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்டுநாவல் கிளையின் சார்பில் புல்வாமா தாக்குதல் நினைவு தினம் மெழுகுவர்த்தி ஏற்றி கடைபிடிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்டுநாவல் கிளைத் தலைவர் சுமதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவகோட்டை வட்டாரச் செயலாளர் ரகமதுல்லா நினைவஞ்சலி செலுத்தினார்.
2019 பிப்ரவரி 14 -ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத் தில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போது, பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச்செய்து பயங்கர வாதிகள் தாக்குதல் தற்கொலைப்படை நடத்தினர்.புல்வாமா தாக்குதலில் 40 சிர்.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
புல்வாமாவில் இதே நாளில் நாம் இழந்த நாயகர்களின் நினைவு தினம் இன்று. அவர்களின் மிகப் பெரிய தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார்கள்.