Close
ஏப்ரல் 4, 2025 6:13 காலை

பட்டறிவு பயணமாக குழிபிறை ஊராட்சிக்கு வந்த அரியலூர் மாவட்டத்தைச்சார்ந்த ஊராட்சித்தலைவர்கள்

புதுக்கோட்டை

பட்டறிவு பயணமாக அரியலூர் மாவட்டத்திலிருந்கு வந்திருந்தஊராட்சித்தலைவர்களுக்கு விளக்கமளிக்கிறார், குழிபிறை ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன்.

அரியலூர் மாவட்டத்தைச்சார்ந்த ஊராட்சித்தலைவர்கள் பட்டறிவு பயணம் வந்து  குழிபிறை ஊராட்சியை பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பட்டறிவு பயணமாக வந்த அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சித்தலைவர்கள் திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் மேற்கொள்ளப் பட்டுள்ள பல்வேறு திட்டங்களை வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், டி. பழூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய 6 ஒன்றியங்க ளைச் சார்ந்த 40 ஊராட்சிகளில் தலைவர்கள் புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு 3 நாள் பட்டறிவுப் பயணம் மேற்கொண்டனர்.

இப்பயணத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் 5 பேர், ஊராட்சித்தலைவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 20 பேர் பங்கேற்றனர்.

பிப். 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் இந்த பட்டறிவுப் பயணம் நடைபெற்றது. இதில்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்.14 ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் தளிஞ்சி ஊராட்சியை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து பிப்.15 -ல் சிவகங்கை மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் நிறைவு நாளான (பிப்16) வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம், குழிபிறை ஊராட்சியில் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை
குழிபிறை ஊராட்சி மன்ற அலுவலத்தை பார்வையிட்ட அரியலூர் மாவட்ட ஊராட்சித்தலைவர்கள்

இங்கு, திடக்கழிவு மேலாண்மை மூலம் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணி, பொற்றாமரைக்குளம், வாரச்சந்தை, சுகாதார வளாகம், குடிநீர்த்திட்டங்கள், ஊராட்சி முழுதும் பொருத்தப்பட்டுள்ள 64 சிசிடிவி கேமராக்கள் , ஊராட்சி அலுவலகத்தின் நிர்வாகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

இந்த பட்டறிவுப்பயணம் மூலம் சிவகங்கை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை மூலம் வீடுகளில் சேரும் குப்பைகளை உரமாக மாற்றி, வீடுகளில் வளர்க்கும் செடிகளுக்கு பயன்படுத்தும் திட்டம், ஊராட்சி நிலங்களை மீட்டு வருவாயைப் பெருக்கும் வழிமுறைகள், சுகாதார வளாகம், வாரச்சந்தை போன்ற திட்டங்களை முன்மாதிரியாக வைத்து தங்களது ஊராட்சிகளில் அத்திட்டங்களை செயல்படுத்த முயற்சி செய்யவுள்ளதாகவும் இதில் பங்கேற்ற ஊராட்சித்தலைவர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை
திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கமளிக்கிறார், குழிபிறை ஊராட்சித் தலைவர் எஸ். அழகப்பன்.

பட்டறிவுப்பயணக்குழுவினரை குழிபிறை ஊராட்சித்தலைவர் எஸ். அழகப்பன் வரவேற்று,  ஊராட்சியில் மேற்கொள்ளப் பட்டுள்ள  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்க மளித்தார்.

இதில். ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் அறிவழகன், குழிபிறை ஊராட்சிச்செயலர் எஸ். ஆறுமுகம், ஊராட்சி உறுப்பினர்கள் முருகப்பன், பழனியப்பன், நாகப்பன், ராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top