Close
ஜூன் 30, 2024 4:37 மணி

சர்வதேச அபாகஸ் போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்ற புதுக்கோட்டை ஆத்மா அகாடமி மாணவர்கள்

புதுக்கோட்டை

அபாகஸ் போட்டியில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்ற மாணவர்கள்

சர்வதேச அபாகஸ் போட்டியில் புதுக்கோட்டை ஆத்மா அகாடமி மாணவர்கள்  சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

புதுக்கோட்டை, சென்னை அபாகஸ் அன்ட் மென்டல் அரித்மெட்டிக் டீச்சர்ஸ் அசோசியேசன் (அமத்தா – AMATA ) நடத்திய சர்வதேச அபாகஸ் போட்டியில் புதுக்கோட்டை ஆத்மா அகாடமி சார்பக கலந்து கொண்ட முதல் நிலைப் பிரிவில் எஸ்.வருணா ஸ்ரீ, எம்.ஆர். முகுந்தன், எம்.ஆர். பவதாரணி, பி.அமிஸ்ரிஜுல், பி.அலைனா, டி. பிரிதிக்ஷா ஆகியோர் அவரவர் கலந்து கொண்ட பிரிவுகளில் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை புரிந்தார்கள்.எஸ். ஆதித்தியன், எம்.ஜி. சுவன், எஸ்.அஜய், எஸ்.பவனேஷ் ஆகியோர் டாப்பர் பரிசு வென்றார்கள்.

பரிசு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாரட்டும் நிகழ்ச்சி புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஆத்மா அகாடமியில் நடைபெற்றது. விழாவில் நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் யோகா ரெத்னா புவனேஸ்வரி பாண்டியன், ஜே.சி.ஐ புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் ரஞ்சித், மண்டல செயல் அலுவலர் கஜேந்திரன், ஜே.சி.ஐ புதுக்கேட்டை கிங்ஸ் தலைவர் சீனிவாசன் ஆகியோர் பரிசுகளும், சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்கள்.

உடன் பெற்றோர்களும், சகமாணவ, மாணவிகளும் பாராட்டி னார்கள். நிறைவாக அகாடமி இயக்குனர் தமிழகன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top