சென்னைத் துறைமுகம் சார்பில் சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை மாநகராட்சி உள்ளிட்டவைகளில் 7 சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ. 3.12 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டது. .
இது குறித்து சென்னைத் துறைமுகம் சார்பில் திங்கள்கிழமை வெளிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னைத் துறைமுகம் ஆண்டு தோறும் கிடைக்கும் நிகர லாபத்தில் சுமார் 2 சதவீதம் அளவிற்கு பெருநிறுவன சமூகப் பொறுப் புணர்வுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு செலவிட்டு வருகிறது.
சென்னைத் துறைமுகம் கடந்த நிதி ஆண்டில் மொத்த வருவாயில் ரூ. 156 கோடி நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதில் உள்ளூர் பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் 7 சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.3.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை மேற்கொள்ளப் பட்டன.
நிதி ஒதுக்கீடு விவரம்: சென்னை மாநகராட்சி சார்பில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் வடசென்னை பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.66 லட்சம், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கம், வகுப்பறை கட்டுவதற்கான திட்டத்திற்கு ரூ.99.78 லட்சம்,
ரோட்டரி கிளப் சார்பில் 100 பார்வையற்றோருக்கு அளிக்கப்பட உள்ள அதிநவீன கருவிகள் வாங்குவதற்கு ரூ. 31.50 லட்சம், பென் அறக்கட்டளைக்கு ரூ. 9 லட்சம், பம்பிள் பி அறக்கட்டளைக்கு 15.95 லட்சம், விவேகானந்தா கலாச்சார மையத்திற்கு ரூ. 7.38 கோடி,
காசநோயைக் கட்டுப்படுத்து வதற்காக ஸ்வர்லிபி அறக்கட்டளைக்கு ரூ.20 லட்சம் என ரூ. 3.12 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் சென்னைத் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் மேற்கொள் ளப்பட்டது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.