Close
ஜூலை 4, 2024 4:46 மணி

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.17 கோடியிலான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

சென்னை

திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.17 கோடியிலான திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்

சென்னை திருவொற்றியூர், கத்திவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.17 கோடியிலான திட்டப் பணிகளுக்கு மாநகராட்சி மண்டலக் குழு கூட்டத்தில் திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலக் குழு மாதாந்திரக் கூட்டம் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில்  ரூ.1.53 கோடியில் செலவில் அமைக்கப்பட உள்ள எரிவாயு தகனமேடை, சுனாமி குடியிருப்பு பகுதியில் ரூ.60 லட்சம் செலவில் தொடக்கப் பள்ளிக்கான கட்டடம்.

கார்கில் நகரில் ரூ. 45 செலவில் சமுதாயக் கூடம்,  10-வது வார்டில் ரூ. 30 லட்சம் செலவில் புதிய மின்கம்பங்கள், 1 மற்றும் 2 வார்டுகளில் ரூ.90 செலவில் பொதுக்கழிப்பிடங்கள், கத்திவாக்கம் பேருந்து நிலையத்தில் கூரை அமைக்க ரூ. 1.35 கோடி என 81 பொருள்கள் அடங்கிய சுமார் ரூ.17 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு மண்டலக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் வெளிநடப்பு:  கூட்டத்தில் 1-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சிவக்குமார் தமது வார்டில் கழிப்பிடம் கட்டும் திட்டப் பணிகளுக்கு அதிகாரிகள் கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகள் தொடர்ந்து முட்டுக் கட்டை போடுவதாக குற்றஞ்சாட்டினார்.

இதற்கு மண்டல அலுவலர் வி.நவேந்திரன் விளக்கம் அளிக்க முற்பட்டார். ஆனால் விளக்கத்தைக் கண்டு கொள்ளமல் அதிகாரிகள் மீது சிவக்குமார் குற்றஞ்சாட்டிப் பேசிக் கொண்டே இருந்ததையடுத்து அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மண்டல அலுவல் நவேந்திரன் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.கார்த்திக் தெருவில் சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப் படுத்தவும், அதே நேரம் வேறு பகுதியிலிருந்து வந்து கால்நடைகள் சட்ட விரோதமாகப் பிடித்துச் செல்வதாகவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top