Small Savings Agent Association Meet
சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டமானது சேலத்தில் அடுத்தமாதம் 3 ந்தேதியன்று நடக்க உள்ளது.
அடுத்த மாதம் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணிக்கு சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் அருகிலுள்ள இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் (ஐஎம்ஏ) ஹாலில் நடைபெற உள்ளது.
அன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சியானது துவங்குகிறது. பின்னர் சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க செயலாளர் வேலுமணி வரவேற்று பேசுகிறார்.
Small Savings Agent Association Meet
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சங்க துணைத்தலைவர் கணேசன் இளம்பிள்ளை, அமைப்பு செயலாளர்கள் சிவக்குமார் ஆத்துார், வெங்கடேஷ் அஸ்தம்பட்டி, சி்த்ரா அஸ்தம்பட்டி, சசிகலா பேர்லேண்ட்ஸ், பழனிவேல் அம்மாப்பேட்டை, பழனிச்சாமி மேட்டூர், ஞானசிகாமணி தாசநாய்க்கன்பட்டி, முத்துப்பாண்டியன் தம்மம்பட்டி,தாமரைச்செல்வி சூரமங்கலம், பாலமுருகன் செவ்வாய்ப்பேட்டை, பாலசுப்பிரமணியம் ஓமலுார், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுசேமிப்பு முகவர்கள் சங்க மாநிலத்தலைவர் நாமக்கல் பாலாஜி வெங்கடேசலு வாழ்த்துரை வழங்கி பேசுகிறார். சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க பொருளாளர் முரளிக்கண்ணன் ஆண்டறிக்கை வாசிக்கிறார்.
Small Savings Agent Association Meet
சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமையுரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் மேற்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பார்த்தீபன் , சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் (பொ)கோபாலன் , சேலம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு துறை முரளிதரன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.
Small Savings Agent Association Meet
மேலும் கடந்த 2022-23 ம் கல்வியாண்டில் முகவர்களுடைய மகன்-மகள் மாவட்ட அளவில் 10ம்வகுப்பு, 12 ம்வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை வாழ்த்தி பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், மூத்த முகவர்களைக் கவுரவித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. எனவே சேலம் மாவட்டத்தினைச் சேர்ந்த அனைத்து சிறுசேமிப்பு முகவர்களும் தவறாமல் சீருடையில் கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு பெருமை சேர்க்கும்படி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் வேலுமணி, பொருளாளர்முரளிக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.