குடியாத்தம்:
மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழகம் முழுவதும் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு அன்னதானமும் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு நிகழ்வாக, வேலூர் மாவட்டம், குடியாத்தம் மனிதநேய ஜனநாயக கட்சியின் 9-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றி, காந்தி ரோடு பகுதியில் உள்ள அரசு நகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், எழுதுகோல் மற்றும் வடிவியல் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் எஸ்.அனீஸ் தலைமை தாங்கினார். மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.நிஜாமுத்தின் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக, இளைஞர் அணி மாநில பொருளாளர் ஐ.எஸ்.முனவ்வர் ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஆரிப், நகர இளைஞர் அணி செயலாளர் அல்தாப், நிர்வாகிகள் ஜீஷான், அலீம் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வேலூர் – சசிகுமார்