மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, தெற்கு போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குருவிக்காரன் பாலம் சாலை முதல் ராம்நாடு ரிங் ரோடு வரை அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள், நம்பர் பிளேட் மாற்றம் செய்துள்ள வாகனங்கள், குடிபோதையில் வாகனம் இயக்குதல் போன்ற போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கும் தக்க அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் வாகனங்களில் தவறான நம்பர் பிளேட்டுகள் நீக்கம் செய்யப்பட்டன. வாகனங்களில் பொருத்தப்பட்ட அதிக ஒளி உமிழும் விளக்குகள் அகற்றப்பட்டு விதிகளை மீறி செயல்பட்ட அனைவருக்கும் தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்து உதவி ஆணையாளர் செல்வின் கூறுகையில், விதிமீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதமும் மற்றும் அதிவேகமாக மற்றும் மது போதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது உரிமம் ரத்து மற்றும் கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிந்தும் பயணிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் இனி இது போன்ற வாகன சோதனைகள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் எனவும் எனவும் தெரிவித்துள்ளார்.