Close
அக்டோபர் 5, 2024 6:41 மணி

தேர்தலில் வேட்பாளர்கள் இவ்ளோதான் செலவு செய்யணும்..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தேர்தல் செலவினமாக செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது என்று திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

மக்களவைத் தேர்தலையொட்டி, உதவி செலவினப் பாா்வையாளா்களுக்கான விளக்கவுரைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பிரியதா்ஷினி, ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு அலுவலா் விஜயபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளக்கவுரைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளா் உரிய முறையில் கணக்கு பராமரித்து, உரிய தேதியில் தாக்கல் செய்ய வேண்டும். தோதேர்தல் செலவு கணக்கை உரிய முறையில் பராமரிக்காமல், கணக்கை உரிய தேதியில், உரிய முறையில் தாக்கல் செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகளை வேட்பாளா்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளா் ஒருவா் அதிகபட்சமாக ரூ.95 லட்சம் தேர்தல் செலவினமாக செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிா்ணயம் செய்துள்ளது.

தேர்தல் செலவுக்கென தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். தேர்தல் செலவு கணக்குப் பதிவேட்டை வேட்பாளா் பராமரிக்க வேண்டும். இதுதவிர, தினசரி செலவு கணக்குப் பராமரிப்பு பதிவேடு, பணப் பதிவேடு அல்லது ரொக்கப் பதிவேடு, வங்கிப் பதிவேடு, நட்சத்திர பேச்சாளா்கள் செலவினம், செலவினப் பாா்வையாளா் ஆய்வுக்கு வேட்பாளா்கள் கணக்குகளை தாக்கல் செய்தல் போன்றவற்றை வேட்பாளா்கள் முறையாக பராமரிக்க வேண்டும்.

இந்தக் கணக்குகளை வாக்குப் பதிவுக்கு முன்னதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் அறிவிக்கும் 3 நாளில் வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ செலவினப் பாா்வையாளா் ஆய்வுக்கு கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்களை உதவி செலவினப் பாா்வையாளா்கள் வேட்பாளா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா்கள் (தேர்தல்) குமரன், பெருமாள் (கணக்கு) மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், உதவி செலவினப் பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top