Close
ஏப்ரல் 2, 2025 11:58 காலை

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்

தமிழ்நாடு

பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாம்

சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் 93 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் மாணவர் பெருமன்றம்- இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்- மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில் நாட்டில் விடுதலைக்காக போராடியவர் மூடநம்பிக்கை கருத்துகளை எதிர்த்தவர் மனுதர்ம சனாதன எதிர்ப்பாளர் பகுத்தறிவாளர் புரட்சியாளர் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரது 93 -ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு  பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும்அனைத்திந்திய மாணவர் மன்றம் இணைந்து இரத்ததான முகாம் நடத்தினர்.

இந்த மருத்துவ முகாமிற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர்க. காரல் மார்க்ஸ் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் த.செல்வி தலைமை வகித்தனர்.இம் முகாமினை பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வ.விஜயன் தொடக்கி வைத்தார்.அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் துணைச் செயலாளர் வ. வாசன் மருத்துவ முகாமில் பங்கேற்றவர்களுக்கு நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top