Close
நவம்பர் 22, 2024 8:54 காலை

உயர்கல்வி பயில மாணவர்களை ஊக்குவிக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்நாதன்..!

சிவகங்கை

சிவகங்கை மருதுபாண்டியர் நகர்அரசு மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவருக்கு ரொக்கப்பரிசளித்த சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன்.

சிவகங்கை: சிவகங்கை தொகுதியி உள்ள அரசுப்பள்ளிகளில்  12 -ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க ஊக்குவிக்கும் வகையில் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் தனது சொந்த பொறுப்பில் ரொக்கப் பரிசளித்து  வருகிறார்.

2021 -ல் நடைபெற்ற தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக  தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. அதில்,  சிவகங்கை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில்  பி.ஆர். செந்தில்நாதன் வெற்றி பெற்றார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 3 தொகுதிகள் திமுக கூட்டணி வசம் சென்ற நிலையில், இவர் மட்டுமே எதிரணியில் இருந்து வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஆண்டில் தனக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு பள்ளிகளுக்கு ஸ்டீல் இருக்கைகளை வழங்கும் விழாவில் பேசிய செந்தில்நாதன், மேல்நிலைப்பள்ளியில் நன்றாகப் படித்தால்தான்  விரும்புகிற உயர்கல்வியில் சேர முடியும். எனவே  சிவகங்கை தொகுதிக்குள்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களில், பள்ளி அளவில் முதல் மதிப்பெண் மாணவ, மாணவிக்கு எனது சொந்தப்பொறுப்பில் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்குவேன் என அறிவித்தார்.

 அதனடிப்படையில், அதனடிப்படையில்,  நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் சிவகங்கை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட 24 பள்ளிகளில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.

சிவகங்கை

அதன்படி, ஆக.12, 13, 14 ஆகிய 3 நாட்கள்  நடைபெற்ற நிகழ்வுகளில், சக்கந்தி, சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, கீழக்கண்டனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி,   தமராக்கி, இடையமேலூர், மலம்பட்டி, கீழப்பூங்குடி, அழமான்நகரி, செம்பனூர், வெற்றியூர், காளையார்கோவில், மல்லல், கொல்லங்குடி, பாகனேரி உள்பட 24 அரசு மேல்நிலைபள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை  நேரில் சந்தித்து ரூ.10 ஆயிரம்   ரொக்கப்பரிசு வழங்கினார்.  இதன் மூலம் 26  மாணவ, மாணவிகளுக்கு மொத்தம்  ரூ. 2.60 லட்சம்  ரொக்கப்பரிசளித்து  வாழ்த்தினார் . இந்த நிகழ்வு மாணவர்களையும் பெற்றோர்களையும் நெகிழ்ச்சியடையச்செய்தது.

இது குறித்து சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் கூறியதாவது: அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பளிக்கும் நோக்கில்  எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் மருத்துவர் கனவு நிறைவேறி வருகிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கல்வித் துறைக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளித்தார்.

 இவர்கள் வழியில்  அரசுப் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில்  இந்த யோசனையை  சொந்தப் பொறுப்பில் செயல்படுத்தி வருகிறேன். ஒவ்வோர் ஆண்டும் இதை செயல்படுத்துவேன். சிவகங்கை தொகுதிக்குள்பட்ட 24  அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓர் உந்துதலைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்  பிஆர். செந்தில்நாதன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top