புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், 31-மேலத்தானியம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கிளை, ஒலியமங்கலத்திலும் மற்றும் திருமயம் ஊராட்சி ஒன்றியம், எம்.எம்.154-கோட்டூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கிளை லெம்பலக்குடி யிலும் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று புதிய கிளைகளை (30.08.2024) திறந்து வைத்தார்.
பின்னர், அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொது மக்களின் நலனுக்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கூட்டுறவுத்துறையின் சார்பில், வங்கிக் கடனுதவிகள் வழங்குதல், மகளிர் சுயஉதவி குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்குதல், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் புதிய கிளைகள் ஒலியமங்கலம் மற்றும் லெம்பலக்குடியில் திறந்து வைக்கப்பட்டது.
ஒலியமங்கலம் கிளை திறந்து வைக்கப்பட்ட தன் மூலம் இப்பகுதியில் உள்ள காயம்பட்டி, வேங்கம்பட்டி, வெள்ளா ளப்பட்டி, வெட்டுக் காடு, சுந்தம்பட்டி, சேர்வைக் காரன்பட்டி, சுரைக் காய்ப்பட்டி, எழுவங் கோரைப் பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார் கள். லெம்பலக்குடி கிளை திறந்து வைக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் உள்ள குலமங்கலம்,ராராபுரம், கும்மங்குடி, கோட்டூர், லெம்பலக்குடி, கடம்பவயல், மல்லாங்குடி, பிலாக்குடிப் பட்டி, பேரையூர், அரசந்தம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.
இந்நிகழ்வுகளில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜீவா, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்தெய்வநாயகி, மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர், இணைப் பதிவாளர் மு.தனலெட்சுமி, கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் ஆர்.சுப்பிரமணியன்,அறந்தாங்கி சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள்,
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களின் மேலாளர் பா.பிரபாகரன், ஊராட்சிமன்றத் தலைவர்கள்சோலையம்மாள் சிவக்குமார் (ஒலியமங்கலம்), ஆர்.பாலு (லெம்பலக்குடி), ஒன்றியக்குழு உறுப்பினர் சிவரஞ்சனி வினோத்குமார், செயலாளர்கள் எம்.சுப்பிரமணியன் (மேலத்தானியம்), ராஜேந்திரன் (லெம்பலக்குடி), உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.