Close
செப்டம்பர் 19, 2024 7:10 மணி

ஏய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புனல்குளத்தில் 5 குடும்பங்களுக்கு இலவச வீடு: எம்எல்ஏ-சின்னத்துரை திறப்பு

புதுக்கோட்டை

ஏய்டு இந்தியா நிறுவனம் சார்பில் புனல்குளத்தில் 5 குடும்பங்களுக்கு இலவச வீடுகளை திறந்து வைத்த எம்எல்ஏ- சின்னத்துரை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளத்தில் எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் ஐந்து ஏழைக் குடும்பங்களுக்கான இலவச வீட்டை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை அடுத்த புனல்குளத்தில் காசியம்மாள்-பொன்னுச்சாமி, விஜயலட்சுமி-பன்னீர்செல்வம், மகமாயி-இடும்பையா, உதயராணி-கருப்பசாமி, விமலா-குமார் ஆகிய தம்பதி யரின் குடும்பத்திற்கு இலவச வீடுகளை எய்டு இந்தியா நிறுவனம் கட்டிக்கொடுத்துள்ளது.

கட்டி முடிக்கப்பட்டு புதிய விடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எய்டு இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை  வகித்தார். திமுக ஒன்றிய துணைச் செயலாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை
எய்டு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டை திறந்து வைத்த எம்எல்ஏ-சின்னத்துரை

புதிய வீடுகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை திறந்து வைத்து பேசியதாவது: எய்டு இந்தியா நிறுவனம் கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட காலத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு  ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறது. கொரோனா காலத்திலும் ஏழை மக்களுக்கான பல்வேறு உதவிகளைச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் வீடுகளை இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு, ஏராளமான வீடுகளை எய்டு இந்தியா நிறுவனம் கட்டிக் கொடுத்து வருகிறது. மேலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாக ஏராளமான ஏழை, எளிய குடும்பத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருவது பராட்டுக்குரியது என்றார் எம்எல்ஏ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top