Close
செப்டம்பர் 19, 2024 9:04 காலை

40 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி..! அடடே..எந்த ஊர்லங்க..?

மட்டன் பிரியாணி தயாரிப்பு பணிகள்

முகம்மது நபிகள் பிறந்த தினம்தான் மிலாடி நபி பண்டிகையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மிலாது நபி. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் மிலாடி நபி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

40 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி

கோவை உக்கடம் பகுதில் இந்த ஆண்டு மிலாது நபி பண்டிகை கொண்டாட்டத்திற்காக இன்று 40 ஆயிரம் பேருக்கு மட்டன் பிரியாணி வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி பிரியாணி சமைக்கும் பணி இரவு பகலாக நடந்து வந்தது.

தற்போது பிரியாணி வழங்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

பிரியாணி சமைக்க 300 சமையல் மாஸ்டர்கள்

இந்த பிரியாணி விருந்திற்கு 400-க்கும் மேற்பட்ட ஆடுகள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பிரியாணி அரிசி, டன் கணக்கில் தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற பிரியாணிக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு 250 பெரிய அண்டாக்களில் 300-க்கு மேற்பட்ட சமையல் கலைஞர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மிலாடி நபி பண்டிகை

அதனைத் தொடர்ந்து இன்று காலை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர்கள் உக்கடம்,ஜி.எம் நகர்,கோட்டைமேடு,கரும்புக்கடை ஆகிய பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பிரியாணி வழங்கினர். மிலாது நபி பண்டிகையொட்டி பள்ளி வாசலில் சிறப்பு தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

9-வது ஆண்டாக பிரியாணி வழங்கும் நிகழ்வு

இதே போல கோவை ஜி.எம்.நகர், பள்ளி வீதி பகுதியில், சுன்னத் ஜமாஅத் யூத் ஃபெடரேஷன் (SYF) மற்றும் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து 9-வது ஆண்டாக தப்ரூக் உணவு வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

ஏழை எளிய மக்களுக்கு உணவு

இதில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பின் தலைவர் ராஷிதுல் உலமா மெளலவி அல்ஹாஜ் K.A. முஹம்மது அலி இம்தாதி ஹஜரத் துவா ஓதி நிகழ்வினை தொடங்கி வைத்தார். இதில் ஜாதிமத பேதமின்றி சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

நீண்ட வரிசையில் பொதுமக்கள்

கோவை உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் பக்கெட்டுகளில் வாங்கிச் சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top