Close
நவம்பர் 2, 2024 4:35 காலை

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை..! எந்த மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலெர்ட் தெரியுமா?

மழை -கோப்பு படம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை(8ம் தேதி) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது

தென்தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் (வட மற்றும் தென்தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக இன்று முதல் 11ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

7ம் தேதி இன்று : தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10ம் தேதி தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

11ம் தேதி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top