Close
நவம்பர் 21, 2024 6:26 மணி

தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா..?

தீபாவளிப் பண்டிகை -கோப்பு படம்

இந்த ஆண்டு தீபாவளி 31ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. அடுத்தநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் பணி நாளாக உள்ளது.

தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. அதற்காக வெளியூர்களில் குடும்பத்துடன் வசிப்பவர்கள் கூட தீபாவளி விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால் இந்த தீபாவளி வியாழக்கிழமை வருவதால் இடையில் ஒரு வெள்ளிக்கிழமை நாள் மட்டும் வேலைநாளாக உள்ளது. இதற்காக அடுத்துவரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கமுடியாமல் போகும்.

அதனால் நவம்பர் 1ம் தேதியை அதாவது வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல தரப்பினரும் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. விரைவில் நவம்பர் 1ம் தேதியை பொதுவிடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிடலாம் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டும் இதேபோல் கடந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்ததால் திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு அதை ஈடுகட்டும் விதமாக 28ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டும் தமிழக அரசு வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்கும் என்று எதிர்பார்பார்ப்புடன் உள்ளனர். குடும்பத்துடன் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வசதியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top