Close
நவம்பர் 21, 2024 9:53 மணி

கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிட வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில் பயிற்சிகளுக்கான

பயனாளிகள் தேர்வு நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுமையம் மற்றும் மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலகம் ஆகியவைகளை ஒருங்கிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலத்தில் 09.11.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா மண்டபத்தில் நடைபெற உள்ள முகாமில் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தனியார் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 9ம் தேதி, சேலத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்பு வழங்கும் சிறப்பு வேலைவாய்பு முகாமில் பங்கேற்க https://forms.gle/9kSxaQGa6g6LMEdj6 என்ற வலைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை, கல்வி சான்று ஆகியவற்றின் நகல்கள், மார்பளவு புகைப்படம், பணி அனுபவச்சான்று மற்றும் சுய விவர குறிப்பு ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் நாளில் நேரில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினையும், 04151-295422 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்பு முகாம் குறித்த தகவலை பெற்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top