மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யவந்த நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து தடாலடி விமர்சனத்தை வைத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கிய நடிகர் விஜய், அண்மையில் தனது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் மிகப்பிரிய அளவில் நடத்தி முடித்தார். அவரின் அரசியல் வருகை தமிழக அரசியல் களத்தில் மிகப்பெறிய எதிர்பார்ப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ‘விஜய் அரசியலுக்கு வந்து எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று ரஜினியின் சகோதரர் சத்திய நாராயண ராவ் கூறியுள்ளது பலரின் கவனத்தை பெற்றுளளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, விஜயின் அரசியல் வருகை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சத்திய நாராயண ராவ், “வரட்டும், வரட்டும் கமலை போன்று விஜய்யும் முயற்சி செய்து பார்க்கட்டும்.” என்று கூறினார்.
மேலும் அரசியலுக்கு வர எல்லோருக்கும் உரிமை உள்ளது. விஜய் தற்போது அரசியலுக்கு வந்து எந்த பிரயோஜனமும் இல்லை. விஜயால் எதுவும் சாதிக்க முடியாது. ஆனால் முயற்சி செய்து பார்க்கட்டும்.” என்று சத்திய நாராயண ராவ் கூறினார்.
‘விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கிறது. அதனால் அரசியலுக்குள் நுழைந்துள்ளார். வந்தாச்சு. இனி என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில் விஜய் ஜெயிப்பது கஷ்டம்” என்றும் சத்திய நாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.’ என்றும் சத்திய நாராயண ராவ் கூறினார்.