Close
நவம்பர் 14, 2024 10:14 மணி

பெரணமல்லுார் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் : ஆட்சியர் நேரடி கள ஆய்வு..!

வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கள ஆய்வு செய்தார்.

பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெடுங்குணம் ஊராட்சியில் கலைஞரிந் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுந்தரேசன் என்ற பயனாளியின் வீட்டின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்து, பணிகளை தரமானதாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்கள்.

தொடர்ந்து நெடுங்குணம் ஊராட்சியில் பதினைந்தாவது நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடத்தை பார்வையிட்டு கட்டிடத்தின் உட்கட்டமைப்பு கழிவறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் மேலத்தாங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024-25ன் கீழ் ரூபாய் 11 லட்சத்து 5 ஆயிரத்து 59 மதிப்பீட்டில் வேலன் குளம் ஆழப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலதாங்கல் ஊராட்சியில் ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் ஜெகதீஸ்வரி என்றபயனாளியின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும்கள ஆய்வின்போது பள்ளி கல்வியை இடை நின்ற நெடுங்குனம் பழங்குடி நகரைச் சேர்ந்த மாணவன் எஸ்.ஆர்யா (6ம் வகுப்பு) மாணவி ராஜராஜேஸ்வரி (6ம் வகுப்பு) மற்றும் மாணவி வைதேகி (9ம் வகுப்பு) ஆகியோர்களுக்கு கல்வி கற்பதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து புத்தகம் மற்றும் பள்ளி சீருடைகள் வழங்கி நெடுங்குணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை தொடர ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலத்தாங்கல் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 223.98 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க துறைச்சார்ந்த அலுவல ர்க ளு க் கு அறிவுறுத்தினார். மேலும் அனைத்து ஊராட்சிகளிலும் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீண்டநாட்களாக வீடு கட்டும் பணியினை மேற்கொள்ளாத பயனாளிகள் குறித்த விவரத்தை கேட்டறிந்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மூலமாக அந்த பயனாளிகளை வீடு கட்டும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top