Close
நவம்பர் 22, 2024 12:07 காலை

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க 8,000த்துக்கும் மேற்பட்ட வழக்குகள்..!

 ஜெ. ராதாகிருஷ்ணன். -உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத்துறை முதன்மை கூடுதல் செயலாளர்.

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க இதுவரை 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புள்ளி விவரங்கள் அளிப்பது மட்டுமே அலுவலர்கள் வேலையில்லை, களத்திலும் பொது மக்களின் குறைதீர்க்க செல்ல வேண்டும் என உணவு பாதுகாப்பு முதன்மை கூடுதல் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பல்வேறு ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக முத்தியால்பேட்டை தொடக்க கூட்டு வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி கனி அங்காடி மற்றும் மருந்தகங்களை திறந்து வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சதாவரம் பகுதியில் உள்ள நியாய விலை கடையினை ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

அங்கு கூட்டுறவு என்பது அனைவரின் ஒருங்கிணைப்பு என்பதை விளக்கும் விதமாக கூட்டுறவு மர ஓவியத்தில் தனது கைகளை வண்ணங்கள் மூலம் பதிவினை பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் பணியினை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் 1858 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க எனக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 771 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாகவே உணவு துறையை நியாய விலை கடைகளுக்கு மட்டுமே கூறி வந்த நிலையில் அதனை தாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க எல்லையோரம் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநில எல்லைகளை தொடர்ந்து கண்காணித்து வந்ததின் தேரில் இதுவரை 8394 வழக்குகளில் 992 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய குற்றவாளிகள் என கருதப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்ததில் 74 பேர்கள் மீது 1663 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அரசுக்கு புள்ளி விவரங்கள் அளிப்பது மட்டும் வேலையாக கொள்ளாமல் களத்தில் நின்று பொதுமக்கள் மற்றும் கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top