காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையம் ரேஷன் கடை கட்டிடங்களுக்கு காஞ்சி எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட 27 -வது வார்டு நத்தப்பேட்டை பகுதியில் , 29 -வது வார்டு வேகவதி தெரு ஆகிய இடங்களில் அங்கன்வாடி மைய கட்டிட அடிக்கல் நாட்டு விழா , 24 வது வார்டு வி.என் பெருமாள் தெரு பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். இதில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் சுமார் 45.75 லட்சம் மதிப்பிலான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து,தாட்டித்தோப்பு பகுதியில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு திட்ட நிதி 2022-23 கீழ் ரூ.2.30கோடி மதிப்பீட்டில் தாட்டித்தோப்பு பகுதி மக்கள் பயன்படும் வகையில் வேகவதி ஆற்றின் குறுக்கே நடைபெற்று வரும் பாலம் கட்டிட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதில் பொறியாளர் கணேசன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்துரு, சுரேஷ், கமலக்கண்ணன், ஷாலினி, குமரன் சரவணன், உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.