காஞ்சி அத்தி வரதர் புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குடமுழுக்கு பணிகள் துவக்கமாக கிழக்கு மற்றும் மேற்கு ராஜகோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 31 வது திவ்யதேசமாக விளங்கும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திவரதர் புகழ்பெற்ற இத்திரு கோயில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் திருக்கோயிலின் மேற்கு கோபுரம் ஏழு நிலை கொண்டு சுமார் 96 அடி அமைந்துள்ளது.
இதேபோல் கிழக்கு ராஜகோபுரம் 9 நிலை கொண்டு 180 அடி உயரம் கொண்ட கம்பீர கோபுரமாக திகழ்ந்து வருகிறது. இதேபோல் உடையவர் சன்னதிக்கும் நடைபெறுகிறது.
இந்நிலையில் வரதராஜ பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா திருப்பணி முதல் கட்டமாக இந்த இரு ராஜ கோபுரத்திற்கான பாலாலய நிகழ்ச்சி இன்று அதிகாலை 2:00 மணிக்கு தொடங்கியது.
முதல் நிகழ்வாக திருமஞ்சனம் கொண்டுவரப்பட்டு ஸ்ரீ பெருமாள் திருவாராதனம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நான்கு மணிக்கு காலாகர்ஷனம், யாகசாலை பூஜைகள் தொடங்கி இறுதியாக ஐந்து முப்பது மணிக்கு பூர்ணாஅதி நடைபெற்றது.
இறுதி நிகழ்வாக துலா லக்கனத்தில் 6.30 மணியளவில் இரு ராஜ கோபுரங்கள் வரையப்பட்ட அத்தி மர பலகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சப்ரோஷணம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை பகுதியிலிருந்து சம்போர்ஷணம் நடைபெற்ற பின் பால்பிம்பம் ஸ்தாபனம் எடுத்துச் செல்லப்பட்டு கண்ணாடி அறையில் எழுந்தருளிய ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோயில் செயல் அலுவலர் சீனிவாசன், பட்டாச்சாரியார்கள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.