காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் ஆறாம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட ஓரிக்கை கணிகாபுரத்தில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இங்கு சாந்த விநாயகர் மற்றும் துர்க்கை படவேட்டம்மன் உள்ளிட்ட ஆலயங்களும் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் ஆறாம் ஆண்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு கடந்த இரண்டாம் தேதி முதல் கந்த சஷ்டி விழாவை ஒட்டி நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மலர் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வந்தனர்.
அவ்வகையில் நேற்று சூரசம்ஹாரம் நிறைவுற்ற நிலையில் இன்று திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானை சமேதராக மயில் இறகுகாலான சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்திருள சிறப்பு யாகசாலை பூஜையுடன் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது.
ஆகம விதிகளின்படி திருக்கல்யாண நிகழ்ச்சியில் காப்பு கட்டுதல், மாங்கல்ய தாரணம், மாலை மாற்றுதல் என அனைத்தும் நிகழ்வுகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இத் திருக்கல்யாண உற்சவத்தில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாக குழு சார்பாக அன்னதானங்கள் மற்றும் திருக்கோயில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.