Close
நவம்பர் 21, 2024 10:49 மணி

காஞ்சிபுரம் கார் தொழிற்சாலை ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளை..!

பீரோவில் இருந்த துணி மற்றும் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை.

காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது காந்தி நகர் . இப்பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

அவ்வகையில் சென்னையைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஒரகடம் பகுதியில் உள்ள கார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வரும் நிலையில் தாய் காந்திநகர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பணி முடிந்த பின் அவ்வப்போது வந்து அவர்களை பார்த்து தங்கி இருந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் அவரது தாய்க்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அழைத்து சென்றிருந்தார்.

இந்நிலையில் அந்த வீட்டின் மாடியில் குடியிருப்போர் இரவு 11 மணியளவில் வீடு திரும்பி வீட்டின் முன் கேட்டை பூட்டிவிட்டு மாடிக்கு சென்ற நிலையில், அதிகாலை வந்து பார்த்தபோது கீழ்த்தளத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள பீரோ உள்ளிட்ட அனைத்தும் திறந்து கிடந்ததை கண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது என்பதை குறித்து செய்த பின், அவரது உறவினர்கள் மட்டும் காஞ்சிபுரம் தாலுக்கா காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுக்கா காவல் ஆய்வாளர் அலெக்ஸாண்டர், வீட்டில் சோதனை செய்தும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 சவரன் நகை கொள்ளை போய் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளை அடிக்க வந்த நபர்கள் செல்போனை எடுத்துச் சென்றான் மாட்டிக்கொள்வோம் என்ற நிலையில், போன் மற்றும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை ஏதும் எடுத்துச் செல்லாமல் நகை மட்டும் குறிக்கோளாக எடுத்துச் சென்றுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top