Close
மே 21, 2025 1:48 மணி

மலைவாழ் மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ்..  கல்வராயன் மலைக்கே சென்று வழங்கி நடிகர் பாலா

ஆம்புலன்ஸ் வழங்கிய பாலாவுக்கு வரவேற்பளித்த மலைவாழ் மக்கள். மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஆரம்பூண்டி ஊராட்சியில் அமைந்துள்ள கெடார் கிராமத்திற்கு போதிய அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து  தருமாறு சமூக சேவகரும் நடிகருமான பாலாவுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்ற  நடிகர் பாலா, கெடர் கிராமத்திற்கு நேரடியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து 108 ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தேவையான குடிநீர் பிரச்சனை 10 ஆண்டுகாளக இருந்து வருகிறது. அதை சரி செய்ய கோரிக்கை வைத்தார்கள்.

அதற்கு அவர், குடிநீர் பிரச்சினையை தானே நானே சரி செய்து தருகிறேன் என உறுதியளித்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top