Close
நவம்பர் 21, 2024 6:56 மணி

கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: போலீசார் குவிப்பால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அருகே வடக்கனந்தல் பகுதியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உள்பட்டு, இந்து சமய அறநிலையைத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீஉமாமகேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 89 சென்ட் பரப்பளவிலான இடத்தை அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர்கள் சிலர் கடந்த 25 ஆண்டுகளாக ஆக்கிரமித்து, கடைகள் அமைத்தும், வீடுகள் கட்டியும் அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டிய அதன் உரிமையாளர்களுக்கு காலி செய்ய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன்பேரில், ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் கடைகளில் இருந்த பொருட்களையும், வீடுகளில் இருந்த பொருட்களையும் காலி செய்த நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top