திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பேண்டி சாம்பியன்ஷிப் போட்டியில், காஞ்சி வீரர்கள் தங்கம்,வெள்ளி உட்பட ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்கள்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா அருகே அமைந்துள்ளது காஞ்சி ஸ்போர்ட்ஸ் அகாடமி. இங்கு பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஸ்கேட்டிங் , பேண்டி , சிலம்பம், ஆர்ச் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சி , தலைமை பயிற்சியாளர் பாபு மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பேண்டி அசோசியேசன் மற்றும் அகில இந்திய பேண்டி ஃபெடரேஷன் இணைந்து , ஐந்தாவது தமிழ்நாடு மாநில அளவில் பிராண்டி சாம்பியன்ஷிப் ஸ்ரீரங்கம் கிரீன் கிராஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் போட்டிகள் நடத்தியது .
இதில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 40 நபர்கள் கலந்து கொண்ட நிலையில், 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் இரு அணிகள் 8 மாணவர்கள் தங்கம் வென்றனர். 14 வயதுக்கு உட்பட்ட அணியினர் வெள்ளி பதக்கத்தையும், பெண்கள் பிரிவு தங்கப் பதக்கத்தையும், 17 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் தங்கம் என பல்வேறு வகையான போட்டிகளில் காஞ்சி மாவட்ட வீரர்கள் அசத்தினர்.
மேலும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் அதிக பதக்கங்கள் காஞ்சிபுரம் மாவட்ட அணி குவித்த நிலையில், காஞ்சிபுரம் ஒட்டுமொத்த அணிகளின் பிரிவில் முதலிடம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மாநில போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.