கடந்த காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தீர்வு காண பல ஆண்டுகள் காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு எதிராக செயல்படுவோர் மீது திமுக அரசு விரைவாக எடுத்து வருவது குறித்து குட்டிக் கதை மூலம் விளக்கிய அமைச்சர் காந்தி.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழா இன்று காஞ்சிபுரம் எஸ் எஸ் கே வி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தார்.
இந்தப் போட்டிகள் சுற்றுச்சூழலை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
தன்னுடைய மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயி ஒருவர் இறந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனையில் அங்குள்ள தொழிற்சாலையின் கழிவு நீர் மாசடைந்தது காரணம் என தெரிய வந்தது கண்டு அவர்கள் காவல்துறை தொழிற்சாலை என பல இடங்களில் அலைந்தும் நீதி கிடைக்கவில்லை.
மாவட்ட ஆட்சியரையும் சந்திக்க இயலாத நிலையில், போராட்டத்தின் வாயிலாக வெளி உலகத்திற்கு தெரிய வந்து அதன் பிறகு அந்த தொழிற்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்து மூடி பத்தாண்டுகள் போராட்டத்தில் இருந்தனர்.
ஆனால் தற்போது தமிழக அரசு சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படுவோர் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது இந்த போட்டியின் மூலமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இளம் வயதிலேயே அறிந்துகொள்வதுடன் தான் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.