சேலம் கோட்டை மைதானத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் லதா, மாவட்ட இணை செயலாளர்கள் மகேஸ்வரி, புனிதவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அ.அமராவதி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் லதா நன்றி கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதியான சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது ஓய்வு பெறுகின்ற நாளில் ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.