மதுரை, வாடிப்பட்டி தாலுகா, அலுவலகத் தில் வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களுக்கு பயிற்சி முகாம் நடந்த து. சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில், வாடிப்பட்டி, அலங்கா நல்லூர் ஒன்றியம் மற்றும் வாடிப் பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், பாலமேடு பேரூராட்சிகள் சமயநல்லூர் உள்ளிட்ட 10 ஊராட்சி பகுதிகளுடன் 244 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் வரும் 16,17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது.
அதில், பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு, வட்டாட்சியர் ராமச்சந் திரன் தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சிய் அல்காபுதீன் வாக்காளர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது குறித்து
பயிற்ச்சியளித்தார்.
இதில், 244 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில், வருவாய் ஆய்வாளர் ராமர் நன்றி கூறினார்.