Close
நவம்பர் 23, 2024 9:57 காலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா..!

கூட்டுறவு உறுதிமொழி எடுத்துக்கொண்ட அலுவலர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவினை காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல அலுவலகத்தில் காஞ்சிபுரம் மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ கொடி ஏற்றி துவக்கி வைத்தார் .

தமிழகத்தில் 195 ஆம் ஆண்டு முதல் நெசவாளர் சங்கம் பெரிய காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டது. இதேபோல் முதல் மாவட்ட கூட்டுறவு மாநாடு 1909 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்டுறவு வங்கி முதன் முதலாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் துவங்கப்பட்டது என்பதும் , முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் 71-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா தமிழக முழுவதும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டலம் சார்பில் 71வது கூட்டுறவு வார விழா மண்டல அலுவலகத்தில் கூட்டறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் ஜெய் ஸ்ரீ கூட்டுறவு கொடியினை ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.

மேலும் கூட்டுறவு மண்டல அலுவலக வளாகத்தில் வனத்துறை உடன் இணைந்து சமூக காடுகள் அமைப்பு திட்டத்தின் கீழ் கூட்டறவு மேலாண்மை கல்வி நிறுவன மாணவ, மாணவிகளுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர்.

இன்று தொடங்கி 20ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி, ரத்ததான முகாம், அரசு மருத்துவமனை உடன் இணைந்து சிறப்பு உடல் பரிசோதனை முகாம் , கூட்டுறவு மேலாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் மாரத்தான் ஓட்டம் மற்றும் 15ஆம் தேதி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் தலைமையில் கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பரிசளித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் என நடைபெற உள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை செயலாட்சியர் சிவக்குமார், துணைப் பதிவாளர் மங்கை பொது விநியோக திட்ட துணை பதிவாளர் மணி உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு மேலாண்மை கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top