சென்னையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் அறுவை சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதன் காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் கூறும்போது, சென்னை மருத்துவரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களுக்கு பணியின் போது தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இல்லையெனில் இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் தீவிரமாகும் என்று தெரிவித்தனர்.
நோயாளிகள் கூறும் போது, சென்னையில் தாக்கப்பட்ட மருத்துவருக்காக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கும் டாக்டர்கள், உடனடியாக நோயாளிகளின் நலன் கருதி சிகிச்சை அளிக்க மருத்துவ சுகாதாரத் துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தனர்.