Close
ஏப்ரல் 2, 2025 11:57 காலை

நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படை..!

நடிகை கஸ்தூரி-கோப்பு படம்

தெலுங்கர்களை அவதூறாக விமர்சனம் செய்த நடிகை கஸ்தூரி மீது தமிழகம் முழுவதும் புகார்கள் எழுந்ததித் தொடர்ந்து அவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தான் விசாரணையில் ஆஜராகவேண்டும் என்று நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் வீட்டைப்பூட்டிவிட்டு தலைமறைவானார்.

இதற்கிடையே முன்ஜாமீன் கேட்டு நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்திருந்தார். அவரது முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட நிலையில் நடிகை கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்க மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

கஸ்தூரியை கைது செய்ய இரண்டு தனிப்படை காவலர்கள் சென்னை விரையவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் மதுரை திருநகர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.அந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top