பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் 63. நாயன்மார்கள் திருமேனி பிரதிஷ்டை திருக்குடை நன்னீராட்டு பெருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
திருவள்ளூர் மாவட்டம், பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் சுமார்-3000 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்த வள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், 1008 லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும் மேலும் அகத்திய முனிவர் லிங்கத்தை பிரதிஷ்ட செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும் இக்கோயிலில் புதிதாக 63 நாயன்மார்கள் பிரதிஷ்டை மற்றும் திருக்குடை நன்னீராட்டு பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு கடந்த 11ம் தேதி அன்று விநாயகர் வழிபாடு புனித நீர் நில தேவன் வழிபாடு, இறைத்திருமேனி நிறுவுதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றது.
13 ஆம் தேதி இரண்டாம் கால வழிபாடு, செந்தமிழ் ஆகமப்படி திருக்குடை நன்னீர் ஆடுதல் எனப்படும் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் அகத்தீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் பல்வேறு வாசன திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து பட்டாடையில் வண்ண மலர்களாலும் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்த பெருமாள் தொண்டு அறக்கட்டளையின் சார்பாக சிவா வாசுகி அம்மன் குழுவினர் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.
மாலை ஆலய வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், இளநீர், ஜவ்வாது,தேன்,பன்னீர், குங்குமம், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட நறுமண திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு தூப,தீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.