Close
நவம்பர் 15, 2024 8:27 காலை

செந்தில் பாலாஜி மீது சி.டி.ஆர். நிர்மல்குமார் ஊழல் புகார்

அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் மீது ரூ.400 கோடி ஊழல் செய்துள்ளதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், கடந்த 2021 முதல் 2023ம் ஆண்டு வரை மின்சாரத்துறையில் 45,800 மின்மாற்றிகள் வாங்க ரூ.1,182 கோடி மதிப்பிலான 10 டெண்டர்கள் விடப்பட்டன.
இதுகுறத்த ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டபோது, டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றாமல் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு வலியுறுத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top