Close
நவம்பர் 15, 2024 4:48 மணி

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு டன் அன்னம், 500 கி காய்கனியால் சிறப்பு அலங்காரம்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையோட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு ஒரு டன் அன்னம் மற்றும் 500 கிலோ காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில், இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக உலக பிரசித்தி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பக்தர்களால் வழங்கிய ஒரு டன் அன்னம் மற்றும் 500 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top