மொபைல் செயலியை பயன்படுத்தி ஏடிஎமில் பணம் எடுக்கும் வசதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்படுத்தி வருகிறது.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க, நீங்கள் இன்னும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துகிறீர்களா அல்லது வங்கிக் கிளைக்கு செல்கிறீர்களா? இது உங்களுக்கானது வாங்க விரிவாகப் பார்ப்போம்.
எஸ்பிஐ ஏடிஎம், வணிகர் பிஓஎஸ் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களிலிருந்து (சிஎஸ்பி), ஏடிஎம் கார்டு விவரங்களை வெளிப்படுத்தாமலேயே பாதுகாப்பாக மற்றும் விரைவாக பணம் எடுக்கும் ஒரு வழிமுறைக்கு மாறவும்.
யோனோ கேஷ் செயலியை பயன்படுத்தி பணத்தை எடுப்பதற்கான வழிமுறைகள்:
- யோனோ எஸ்பிஐ ஆப்-ல் உள்நுழையவும்
- யோனோ கேஷ்-ன் மீது தட்டவும்
- ஏடிஎம்/ வணிகர் பிஓஎஸ்/ வாடிக்கையாளர் சேவை மையங்கள் (சிஎஸ்பி) மீது தட்டவும்
- கணக்கு மற்றும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்
- பரிவர்த்தனைக்கான உங்கள் குறிப்பிட்ட ரகசிய எண்ணை (PIN) உருவாக்கவும்
- ஏடிஎம் இயந்திரம் / வணிகர் பிஓஎஸ் / வாடிக்கையாளர் சேவை மையங்களிலுள்ள (சிஎஸ்பி) யோனோ கேஷ் என்பதின் மீது தட்டவும்
- எஸ்எம்எஸ் மூலம் பெறப்பட்ட யோனோ கேஷ் பரிவர்த்தனை ஐடியை உள்ளிடவும்
Google Play Store (Android) அல்லது Apple App Store (iOS) இல் Yono SBI செயலியைப் பதிவிறக்க:
ஆன்ராய்டு போனுக்கான செயலியை பதிவிறக்கம் செய்ய https://play.google.com/store/apps/details?id=com.sbi.lotusintouch என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
iOS போனுக்கான செயலியை பதிவிறக்கம் செய்ய
https://apps.apple.com/in/app/yono-sbi-banking-and-lifestyle/id1231393474 என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.