பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்று படுகைகள் , நீர்நிலைகளில் மணல் அள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தது தற்போது வரை செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதாக காவல் நிலையத்துக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் நேற்று இரவு பொன்னேரி கரை காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வகையில் வேளியூர் பகுதியினை சேர்ந்த சுகுமார் , கோபால் மற்றும் விக்னேஷ் ஆகியோர் இரு வேறு லாரிகளில் அரசு தடைகளை மீறி மணல் கடத்தலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மணல் கொண்டு சென்ற இரண்டு லாரிகளையும் பொன்னேரிக்கரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மூன்று நபர்களையும் சிறையில் அடைக்கப்பட்டனர்.