Close
நவம்பர் 18, 2024 12:27 காலை

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தரை தாக்கிய வியாபாரிகள்..! பக்தர்கள் அதிர்ச்சி..!

பக்தர்களை தாக்குவதை தடுத்த காவலரிடம் வாக்குவாதம் செய்யும் வியாபாரிகள்.

சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரை உள்ளூர் வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். மேலும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை போன்ற நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வது வாடிக்கை.

இந்நிலையில் கோயிலுக்கு அருகிலேயே கோயிலுக்கு வந்த தம்பதிகளை அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பெண் வியாபாரி ஒருவர் எட்டி எட்டி பக்தரை பாய்ந்து பாய்ந்து அடிக்கிறார்.

தொடர்ந்து அங்கு வந்த காவலர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை விலக்கி தம்பதியரை அப்புறப்படுத்தி அனுப்பி வைக்கிறார். சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரை அப்பகுதி வியாபாரிகள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களின் தொலைபேசி எண்களும் முகவரியும்

கோயிலுக்கு வந்த பக்தருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன? எதனால் இந்த சண்டை நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போ கோயிலுக்குப் போவதும் பாதுகாப்பு இல்லையோ..?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top