Close
நவம்பர் 18, 2024 3:03 மணி

தமிழகத்தை கலக்கிய கத்திக்குத்து : அரசின் நடவடிக்கை போதுமா..?

மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்.

தமிழகத்தை கலக்கிய இரண்டு கிரைம் சம்பவங்களில் அரசின் நடவடிக்கை போதுமா? என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சமீபத்திய இரண்டு செய்தி 1) தனது வக்கீலை கொன்று உடலை எரித்த அவருடைய கட்சிக்காரர். 2) தனது தாயாருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர்.

இந்த இரண்டு குற்றங்களையும் எந்த காரணம் சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள், மாற்றுக் கருத்து இல்லை. பாதிக்கப்பட்ட நபர்கள் சார்ந்த தொழில்துறை நண்பர்கள் அவர்கள் சார்ந்திருக்கும் தொழிற்சங்கம் போராட்டத்தை முன்னெடுக்கிறது.

வழக்கம்போல் ஆட்சியாளர்களும் மீடியாவுக்கு பேட்டி கொடுத்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதி அளிக்கிறார்கள். வக்கீல்களுக்கு, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு, போலீஸ் காவல் வழங்கப்படும் என்று அனைத்து விதமான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாகவும், உச்சபட்ச பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என்று உத்திரவாதப்படுத்தவும் செய்கிறார்கள்.

அதை மீடியாவும் வெளியிடுகிறது. இந்த குற்றங்களுக்கான காரணமாக சொல்லப்படுவது

1) தனக்காக வாதாட வேண்டிய வக்கீல் தன்னிடமும் பணம் பெற்றுக் கொண்டு எதிர்க்கட்சி வக்கீலுக்கு ஆதரவாக அவரிடமும் பணம் பெற்றுக் கொண்டு வழக்கின் போக்கை எதிர்க்கட்சிக்காரருக்கு சாதகமாக்கினார். இந்த வழக்குரைஞரை கொன்று எரித்த சம்பவம். நம்பிக்கை துரோகம்.

2) தனது தாயாரின் கொடிய நோய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை கேலி பேசுவது அலைக்கழிப்பு செய்வது காத்திருக்க வைப்பது ஆங்கிலத்திலேயே பரிகாசம் செய்வது போன்ற நடவடிக்கையால் எரிச்சல் உற்று தாயாரின் மரண அவஸ்தையை பார்க்க சகிக்க முடியாமல் மருத்துவரை கத்தியால் குத்துகிறார்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

குற்றத்திற்கான காரணத்தைப் பற்றி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், மீடியாவும் பேச மறந்து விடுகிறார்கள்.

இந்த இரு விஷயத்திலும் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களும் ஒரு வகையில் குற்றவாளி தான். அதற்காக பொதுமக்கள் நேரடியாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தண்டனை அளிப்பது சட்டப்படி குற்றம் தான், என்பதாலேயே அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுக்காமல் விட்டு விடுவது எப்படி நியாயமாகும்.

குற்றத்திற்கான உண்மையான காரணத்தை தடுத்தால் தானே இது போன்ற சட்டத்தை கையில் எடுக்கும் பொதுமக்கள் செய்யும் குற்றங்கள் தடுக்கப்படும். குற்றவாளிகளில் எவன் அதிக பலமுடையவனாக இருக்கிறாரோ அதிகாரத்தில் இருக்கிறாரோ அவன் பாதுகாக்கப்படுகிறான்.

அப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் முன்வந்து பாதுகாப்பு கொடுப்பதாக வெட்ட வெளியில் அறிக்கை வாசிக்கிறார்கள். எந்த இடத்திலும் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளோ, தனது கட்சிக்காரருக்கு எதிரான செயலில் ஈடுபடும் வழக்குரைஞர்களோ தவறு செய்வது பற்றிய புகார் வந்தால் அவர்கள் மீது மிகவும் கடுமையான தண்டனை சட்டத்தை அமுல்படுத்தப்படும் என்று  அறிக்கை எந்த இடத்திலும் வரவில்லை.

இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது உரிமை மறுக்கப்பட்ட பொதுமக்களில் ஒரு சிலர் வெகுண்டு எழுந்தால், அவர்களை வெட்ட வெளியில் சித்திரவதை செய்வதை மற்ற பொது மக்கள் அனைவரும் வேடிக்கை பார்க்கும் காட்சி நினைவில் வருகிறது.

உரிமை கேட்பது குற்றமா, குற்றமில்லை உரிமை கேட்கப்பட்ட விதத்தில் தான் குற்றம். அப்படி என்றால், கேட்கப்பட்ட விதத்திற்கான தண்டனையை கொடுத்து விட்டு அவனது உரிமையை வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தான். இங்கே அனைவரும் கேட்க வேண்டிய கேள்வி.

அதை மக்கள் புரிந்து கொள்ள முடியாதவாறு செய்தியையும் அரசின் போக்கையும் திசை மாற்றுவது ஏற்புடையதில்லை. ஒருவேளை ஆட்சியாளர்களுக்கே அந்த சிந்தனையில்லை என்று சொன்னால் அவர்கள் ஆட்சியாளர்களாகவே இருப்பதற்கு லாயக்கில்லை என்பதுதான் பொருள்.

சிந்திப்பது தான் ஆறறிவுக்கான இலக்கணம். இந்தப் பதிவை நான் வாய்மொழியில் டைப் செய்யும் போது ஆறறிவுக்கான லட்சணம் என்று சொன்னேன், அது இலக்கணம் என்று பதிவாகியது.

ஒரு இயந்திரத்திற்கு இருக்கின்ற கடமை உணர்வும், பொறுப்புணர்வும், பொருள் சார்ந்த பொது அறிவும் ஆட்சியாளர்களுக்கு இல்லையே, வெட்கக்கேடு.

நன்றி: நண்பர் மீனாட்சிசுந்தரம் அவர்களின் சமூக வலைதளப்பதிவு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top