Close
நவம்பர் 17, 2024 9:33 மணி

அண்ணா  பூங்கா நுழைவுவாயிலில் கடைகள்ஆக்கிரமிப்பு: சிரமத்தில் பொதுமக்கள்

அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா நுழைவாயிலில் ஆக்கிரமித்துள்ள கடைகளால் பொதுமக்கள் உள்ளே செல்ல பெருத்த சிரமம் ஏற்படுகிறது. அவசர நிலையில் வெளியேற வழியில்லாமல் உள்ள நிலையை போக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்

கோயில் , பட்டு  நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பொது மக்களின் பொழுதுபோக்கு என திருக்கோயில்கள் மற்றும் திரையரங்குகளில் இருந்த நிலையில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு ஒட்டி காஞ்சிபுரம் மடம் தெரு அருகே பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேரறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்று நாள்தோறும் மாலை வேலைகளில் பூங்காவிற்கு நூற்றுக்கணக்கான நபர்கள் வருகை புரிந்து வந்தனர். சிறுவர்களுக்கென பல்வேறு விளையாட்டு சாதனங்களும், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்திகொள்ள இலகுரக உடற்பயிற்சி சாதனங்களும், நடை பயிற்சிப்பாதைகளும் அமைக்கப்பட்டதால் அனைவரும் இங்கு வர விரும்பினர். அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான நபர்கள் குடும்பத்துடன்  பூங்காவிற்கு வருகை புரிந்து மகிழ்ச்சியுற்றனர்.

இந்த பூங்காவிற்கு பிரதான நுழைவாயிலும் மற்றும் ஒரு நுழைவு வாயிலும் என இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளது. பூங்காவிற்கு வரும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த விசாலமான இடம் உள்ளதால் எந்தவித இடைஞ்சலும் இன்றி பொதுமக்கள் வந்து சென்றனர்.

ஆனால் தற்போது இந்த பூங்காவின் ஒரு கேட் முற்றிலும் மூடப்பட்டு சிறிய நுழைவாயில் பகுதி வழியாகவே பொதுமக்கள் குழந்தைகள் என பூங்காவிற்கு செல்லவும் வெளியேறும் நிலை உள்ளது.

அந்த கேட் அருகே சாலையோர வியாபாரிகளும் தங்கள் பொருட்களை விற்க அந்த இடத்தில் கடை வைத்துள்ளதால் மேலும் சிக்கலான குறுகிய இடைவெளியிலேயே அனைவரும் செல்லும் நிலையிலும் உள்ளது.

ஏதேனும் அவசர நிலையில் வெளியேற முயன்றாலும் பெரும் சிக்கலும் ஆபத்து இதுபோன்ற நிலையினால் ஏற்படும் அபாயம் உள்ளதால் உடனடியாக பிரதான நுழைவு வாயில் அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதும், இரண்டு கதவுகளையும் திறந்து பொதுமக்கள் எளிதில் செல்லவும், வெளியேறும் வகையில் மீண்டும் செயல்படுத்த அதனை திறக்க வேண்டும் என  பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கதவு மூடப்பட்டது குறித்து விசாரித்தபோது, கால்நடைகள் பூங்காவில் சென்று விடுவதால் குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் ஒரு நுழைவாயில் மட்டுமே திறக்க கூறியுள்ளதாகவும், அந்தப் பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் மாநகராட்சி ஒப்பந்ததாரரர் வரிவசூல் செய்வதால் அவர்கள் வெளியேற மறுப்பதாகும் தெரிவிக்கின்றனர்.

அனைவரின் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக காஞ்சிபுரம் மாநகராட்சி இரு நுழைவு வாயில் பொதுமக்கள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கால்நடைகள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top