Close
ஏப்ரல் 3, 2025 3:53 காலை

நீர்பிடிப்பு குட்டையில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதை தடை செய்யக்கோரி மனு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் பகுதியில் நீர்பிடிப்பு குட்டையில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டி வரும் நிலை.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்தனர்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் ஊராட்சி  பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

அம்மனுவில், சிவபுரம் கிராமத்தில் சர்வே எண் 18/1ல் , குட்டை அமைந்துள்ளது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி வருகிறார். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் எந்தவித கட்டிடமும் கட்டக் கூடாது என்று அறிவுறுத்தி வந்த நிலையில், அதனை அலட்சியம் செய்து ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி வருகிறார்.

மேலும் குட்டையில் உள்ள ஆற்று மணலை ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட பயன்படுத்தி வரும் நிலையில் மிக தரக்குறைவான முறையில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறதாகவும்,  இதனால் வருங்காலத்தில் குறைந்த காலமே இதன் தன்மை உள்ளது என்பதால் உடனடியாக இதனை தடை செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே மீன் நிலை குட்டை பகுதியில் பஞ்சாயத்து அலுவலகம் கட்டி வரும் செயலை மாவட்ட ஆட்சியர் உடனடியாக தடை செய்ய வேண்டும் என இந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top