தமிழக சடடமன்ற தேர்தல் வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது.தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் திட்டமிட்டு களப்பணி ஆற்றி வருகின்றன. இதற்கான பணிகளை தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சியும் துவங்கிவிட்டது.
முன்னெப்போதையும்விட வருகின்ற 2026ம் ஆண்டு தேர்தல் பல ஆண்டுகாலமாக நேருக்கு நேர் மோதிவந்த திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மெகா கட்சிகளுக்கு இடையே தற்போது விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக மோதவுள்ளது. முற்றிலும் ஒரு வித்தியாசமான அரசியல் களத்தை தமிழ்நாடு எதிகொள்ளவுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை பெரும் அரசியல் ஆளுமைகளாக இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியும் இறந்தபிறகு 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்றது. அதேசமயம், திமுக வலுவான கூட்டணியை அமைத்து 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெற்றது. .
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வென்றதன் மூலம் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்போது கடந்த மூன்றரை வருடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்பதையும் மக்கள் பார்த்து வருகின்றனர்.
ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சி இல்லாமல், எடப்பாடி பழனிசாமி, மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிகளை மக்கள் பார்த்துவிட்டனர்.
அதனால் மக்கள் தெளிவாக அடுத்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த கட்சிகளுக்கு இடையே அடுத்ததாக தவெகவின் வருகையும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில்கொண்டு கடந்த சில ஆண்டுகளாகவே அதைநோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தனது அரசியல் வருகையை அறிவித்துவிட்டு விஜய் அதன்பிறகு தனது கட்சியை பதிவு செய்வது, கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தியது. அதில், தனது கொள்கைகளை அறிவித்தது என தமிழ்நாட்டு அரசியலில் தனது இருப்பை அழுத்தமாக அறிவித்துவிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக திமுக, அதிமுக என இருமுனைப் போட்டியை தமிழக அரசியல் கொண்டுவந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சி மூன்றாவது முனையாக போட்டிக்கு வந்தது. தற்போது விஜயின் தவெக நான்காவது முனையாக வந்துவிட்டது.
இன்னும் சில கட்சிகள் கூட்டணியாகவோ அல்லது தனித்து நின்று ஐந்து முனைப் போட்டியை ஏற்படுத்தினாலும், அரசியலும் வாக்குகளும் இந்த நான்கு முனையை சுற்றியே சுழன்று வரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதற்கிடையே தர்மபுரி மாவட்ட தவெக வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனைக் கூட்டம் இன்று(18ம் தேதி) நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய தவெக தர்மபுரி மாவட்டத் தலைவர் சிவா, “2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் இருந்து போட்டியிடுவார்” என்று கூறியிருப்பது பலரது கவனத்தைப்பெற்றுளளது.