Close
ஏப்ரல் 11, 2025 4:37 மணி

கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட் சார்பில் இலவச தோல் சிகிச்சை முகாம்..!

கம்பம் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாம்.

தேனி மாவட்டம், கம்பத்தில் பிளெஸ் ஆல் டிரஸ்ட், மதுரை ஆம்ரா தோல் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய தோல் சிகிச்சை முகாமில் பலர் பங்கேற்றனர்.

காமாட்சியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்ற முகாமிற்கு ஓ.ஆர். நாராயணன் முன்னிலை வகித்தார். எம்.சி. வீரபாண்டி, விஷ்வகுல ஐக்கிய சங்கத்தலைவர் சொக்கராஜா தலைமை வகித்தனர். மருத்துவர்கள் ரஞ்சித்குமார், ஜெயலட்சுமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனைகள் செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., சுப்புராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காதில் சீல் வடிதல், தேமல், சொரியாசிஸ், முடி கொட்டுதல் உள்ளிட்ட நோய்களுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், முதியோர், சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து கொண்டனர். அவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாம் ஏற்பாடுகளை பிளெஸ் ஆல் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்  கே. பார்த்திபன், நிதி அறங்காவலர் ‘ஏசி ஸ்டூடியோ’ குபேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top