சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ரூ.3,600 கோடி மதிப்பிலான திட்டத்திற்கான ஒப்பந்தத்தை பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) பெற்று, அதன் நெட்வொர்க்கில் மேலும் 70 ஓட்டுநர் இல்லாத ரயில்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ரயில்கள் ஒவ்வொன்றும் மூன்று பெட்டிகளுடன், பெமல் நிறுவனத்தின் பெங்களூரு பணிமனையில் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஓட்டுநர் இல்லாவிட்டாலும், பயணிகளுக்கு உதவவும். பயணத்தின் போது புகார்களைக் கையாளவும் பணியாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு ரயிலும் 1,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டதாக இருக்கும்.
36 ஓட்டுநர் இல்லாத ரயில்களின் முதல் தொகுதி ஆரம்பத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் உள்ள அல்ஸ்டோம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ரயில்களில் முதல் ரயில் கடந்த மாதம் டெலிவரி செய்யப்பட்டு தற்போது சென்னை பூந்தமல்லி மெட்ரோ யார்டில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ.), மாதவரம் பால் காலனி முதல் சிறுசேரி சிப்காட் (45.8 கி.மீ.), மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (47 கி.மீ.) ஆகிய மூன்று முக்கிய வழித்தடங்கள் உட்பட இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டமும் நடந்து வருகிறது. இந்த மூன்று வழித்தடங்களிலும் ஓட்டுனர் இல்லா ரயில்கள் இயக்கப்படும்.