காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தின் வருகை பதிவேடு காலி ஆகிவிட்டதால், பேப்பரில் கையெழுத்து வாங்குகிறோம் என ஆணையர் கூறியதால் காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாமன்ற மாதாந்திர கூட்டம் இன்று மேயர்
மகாலட்சுமி தலைமையில் துவங்கியது. இக்கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் நவேந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சுமார் 45க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பு உறுப்பினர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான கையெழுத்து பெற முற்பட்டபோது அதற்கான புத்தகம் எங்கே என கேட்டபோது அது தீர்ந்து விட்டதாக கூறப்பட்டது.
இதனால் மாநகராட்சி சார்பில் பிரிண்ட் செய்யப்பட்ட காகிதத்தில் கையெழுத்து இட முடியாது என கூறி மாமன்ற உறுப்பினர்கள் சிறு சலசலப்பை ஏற்படுத்தினர்.
இதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், உறுப்பினர் பதிவேடு காலி ஆகிவிட்டதால் இந்த கையெழுத்து சீட்டை முதல் பக்கமாக வைத்து அடுத்த புத்தகம் தயார் செய்யப்படும் என கூறி கையெழுத்து இடுமாறு வேண்டிக் கொண்டார்.
உரிய காலத்திற்கு முன்பே அதனை சரி செய்தீர்கள் அமைய என கூறி மாமன்ற உறுப்பினர்கள் 10 நிமிடம் சலசலப்பை ஏற்படுத்திய பின் அனைவரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் 196 தீர்மானங்களை வாசிக்க அதில் உள்ள சிறு குறைகளை களைய கோரிக்கை வைத்து குறித்து மாமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.
மாநகராட்சி அலுவலர்களுக்கு கடந்த கூட்டத்தின் போதே வருகை பதிவேடு காலி ஆகியது தெரியாதா ? இன்று காலை தான் தெரிந்ததா ? என பல்வேறு கேள்வி எழுந்தாலும் அலட்சியம் காரணமாகவே தெரிகிறது.