Close
ஏப்ரல் 3, 2025 11:35 மணி

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை: சபரிமலை பக்தர்கள் ஏமாற்றம்

தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றால அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சபரிமலைக்கு சென்று வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top