Close
ஏப்ரல் 4, 2025 11:32 காலை

ஓசூரில் கோர்ட் வளாகத்திலேயே வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..!

வழக்கறிஞர் கண்ணனை வெட்டிய பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட் வளாகத்திலேயே ஒரு வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன். இன்று அவர் கோர்ட் வளாகத்தில் இருந்தபோது ஆனந்தன் என்ற பயிற்சி வழக்கறிஞர் பட்டப்பகலில் பலரும் பார்த்துக்கொண்டிருக்க வெட்டிச் சாய்த்தார்.

இதில் பலத்த வெட்டுக்காயங்கள் அடைந்த வழக்கறிஞர் கண்ணனை பிற வழக்கறிஞர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top