தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, ”மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, 20.11.2024 காலை 9 மணி முதல் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் தென்னேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருந்தகம் அறையினை பார்வையிட்டு, மருந்துகளின் இருப்பு நிலைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்து, நத்தாநல்லூர் கிராமத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயன் பெற்று தொடங்கப்பட்ட ஆட்டோ உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை பார்வையிட்டு, பணியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதியை பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை தரத்தை ஆய்வு மேற்கொண்டு, தென்னேரி அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு, மாணவ/மாணவியர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.
பின்பு கூட்டுறவு துறை சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து, ஊத்துக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கான இலவச மருத்துவ முகாமை பார்வையிட்டு, வழங்கப்படும் சிகிச்சை முறையினை ஆய்வு மேற்கொண்டு, வாலாஜாபாத் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ-சேவை மையத்தையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.