Close
ஜனவரி 28, 2025 11:03 மணி

கூடலுார் மாணவனுக்கு ஹீரோ ஸ்டார் குழு பாராட்டு..!

மாணவனுக்கு பாராட்டு

தடகள போட்டிகளில் சாதனை படைத்த கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளி மாணவனை கோட்டூர் ஹீரோ ஸ்டார் குழுமம் பாராட்டி உள்ளது.

தமிழக அரசு பள்ளி கல்வி துறை சார்பில் மாநில அளவிலான 65வது குடியரசு தினவிழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டியில் தேனி மாவட்டம் என்.எஸ்.கே.,பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் கு.இன்பத்தமிழன் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் 200 மீ, 400மீ, 600மீ என மூன்று போட்டிகளில் முதலிடம் பிடித்துள்ளார். தவிர குறைந்த வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் தலைமையில் இந்த மாணவனுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில் V.பழனிராஜா Enviro Trend Setter (Total water & Waste Water Solution ) இன்பத்தமிழனுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவம் செய்தார். பழனிராஜா படிப்பில் முதலிடம் பெற்றதற்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஹீரோ ஸ்டார் ராஜதுரை மற்றும் ஹீரோ ஸ்டார் ஜெயப்பிரகாஷ் சிறப்பாக செய்து இருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top